குடியரசுத் தலைவரை குடும்பத்தினருடன் சந்தித்த எம்.எஸ். தோனி..!

குடியரசுத் தலைவரை குடும்பத்தினருடன் சந்தித்த எம்.எஸ். தோனி..!

ஜார்கண்ட்  மாநிலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவரை குடும்பத்தினருடன் சென்று ராஜ்பவனில் சந்தித்துள்ளார் மகேந்திரசிங் தோனி.

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இவர் தனது மனைவி சவீதா கோவிந்தை உடன் அழைத்து சென்று  ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் தங்கி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். 

dhoni

அப்போது, உலக கோப்பைக்கு பிறகு ராணுவ பயிற்சிக்காக இரண்டு மாதங்கள் விடுப்பில் இருந்த இந்த  தோனி தனது ராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு ராஞ்சி திரும்பினார்.  இதனையடுத்து, வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலும் இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்து குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில்  ஜார்க்கண்ட் சுற்றுப்பயணத்திற்காக வந்திருந்த குடியரசுத் தலைவரை ராஜ்பவனில் நேரில் சந்தித்து பேச கோரிக்கை விடுத்திருந்தார். தோனியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் நேரில் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்தார்.

தனது மனைவி சாக்ஷி மற்றும் குழந்தை ஸிவா இருவரையும் அழைத்துக்கொண்டு ராஜ்பவனில் குடியரசுத் தலைவரை சந்தித்து தோனி சில நிமிடங்கள் பேசினார். அதில், அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசப்பட்டதாகவும், ஜார்கண்ட் மாநில பாஜகாவில் தோனி விரைவில் இணைவது குறித்து பேசியதாவும் தகவல்கள் வருகின்றன.

ramnath singh

டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை இந்திய அணியில் தோனி இருக்க மாட்டார் என்பதால், வங்கதேச அணிக்கு எதிரான தொடர் மற்றும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி ஆடுவது சந்தேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-vicky