குடிபோதையில் செவிலியர்: இரண்டு துண்டான பச்சிளம் குழந்தை; அதிர்ச்சி தரும் உண்மை சம்பவம்!

 

குடிபோதையில் செவிலியர்: இரண்டு துண்டான பச்சிளம் குழந்தை; அதிர்ச்சி தரும் உண்மை சம்பவம்!

பிரசவத்தின்போது செவிலியர் குழந்தையை வேகமாகப் பிடித்து இழுத்ததில் குழந்தை பாதியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: பிரசவத்தின்போது செவிலியர் குழந்தையை வேகமாகப் பிடித்து இழுத்ததில் குழந்தை பாதியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் ராம்கார் நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் திக்ஷா கன்வார் என்ற கர்ப்பிணிப் பெண், பிரசவத்துக்காகக் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆண் செவிலியர்கள்பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் இருவரும் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.

doctor

அப்போது குழந்தை வெளிவரும் நிலையில்  வேகமாக இழுத்ததால், குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளியே வந்துள்ளது. உடனே, பதறிய செவிலியர், குழந்தை பாதியாக வெளியே வந்ததை மறைத்து, குழந்தைப் பிறப்பதில் சிக்கல் உள்ளது. வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கர்ப்பிணியின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, கர்ப்பிணிப் பெண் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போது அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தையின் தலைப் பகுதி மட்டும் இருந்துள்ளது. கர்ப்பிணியின் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

baby

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ராம்கார் அரசு மருத்துவமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், வெளியே வந்த பாதி உடலை, அந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மறைத்துவைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த ஆண் செவிலியர்கள் அம்ரிட்லால், ஜுன்சார் சிங் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இருப்பினும், இதுவரையில் இருவரும் கைது செய்யப்படவில்லை. 

இதைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கு தீவிரச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.