கீழே விழுந்த கென்யா சிறுவன் -சிகிச்சைக்கு பணமில்லாமல் சீரியஸ் -உதவி  கேட்டு ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்.. 

 

கீழே விழுந்த கென்யா சிறுவன் -சிகிச்சைக்கு பணமில்லாமல் சீரியஸ் -உதவி  கேட்டு ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்.. 

பல வாரங்களுக்கு முன்பு  இந்தியாவில் கீழே விழுந்ததால் மூளையில்  அடிபட்டு சீரியசான நிலையில் சிகிச்சைக்கு பணமில்லாமல் சிக்கித் தவிக்கும் ஐந்து வயது கென்ய சிறுவனான ஈதன் மச்சாரியாவின் தாய் ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளார்.

அந்த ஐந்து வயது சிறுவனின் தாய் வெரோனிகா என்ஜெரி கென்யா ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தனது மகன் ஈத்தன் இந்தியா வந்தபோது கீழே விழுந்ததில் அவனது தலையில் அடிபட்டதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் ,அதனால் அவனுக்கு அடிக்கடி வலிப்பு வருவதாகவும் ,அதை சரிப்படுத்த ஒரு மிகப்பெரிய வி .என். எஸ். சர்ஜ்ரி செய்யவேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர் .அந்த சர்ஜெரிக்கு 3.5 மில்லியன் சிலவாகுமென்பதால் அதற்கு தன்னிடம் பணமில்லை .அதனால் தாங்கள் பணஉதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார் .
மேலும் அந்த வலிப்பால் அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லமுடியவில்லை .சரியாக சாப்பிடமுடியாமல் .தூங்கமுடியாமல் அவதிப்படுவதாக கூறிய அவர் சிறுவனின் நலம் விரும்பிகளிடமும் உதவி கேட்டு மன்றாடியுள்ளார் . 14 மாதங்களாக சிறுவன் அவதிப்படுவதாக கூறும் அவர் ,எதிர்காலத்தில் அவனை ஒரு கால்பந்து வீரனாக்கவேண்டும் என்பதே அவரது லட்சியமாம்