கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இந்த மாதத்துடன் நிறைவு!

கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இந்த மாதத்துடன் நிறைவு!

கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3 ஆம் கட்டமாக அகழாய்வு மேற்கொண்டனர்.

கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3 ஆம் கட்டமாக அகழாய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4 ஆம் கட்ட அகழாய்வை மேர்கொண்டது. இதைத்தொடர்ந்து 5 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த பணி இந்த மாதத்துடன் நிறைவடையும் என கூறப்படுகிறது. 

கீழடி

இதுவரை தோண்டப்பட்ட 30 க்கும் மேற்பட்ட குழகளில் பண்டைகால அணிகலன்கள், மணிகள், பானை, ஓடுகள், குறியீடுகள், உறை கிணறுகள்,செப்புக்காசுக்கள், உணவு மற்றும் தண்ணீர் குவளைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 6-ம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது