கீழடி அகழ் வைப்பகத்துக்கு ரூ.12.21 கோடி! – தமிழக அரசு தாராளம்

 

கீழடி அகழ் வைப்பகத்துக்கு ரூ.12.21 கோடி! – தமிழக அரசு தாராளம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பழந்தமிழர் நாகரீக ஆதாரங்கள் அகழ்வாய்வின் மூலம் கிடைத்தது. இந்த அகழ்வாய்வைத் தொடர, நடந்த அகழ்வாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழர் பொருட்களை பாதுகாக்க அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.12.21 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பழந்தமிழர் நாகரீக ஆதாரங்கள் அகழ்வாய்வின் மூலம் கிடைத்தது. இந்த அகழ்வாய்வைத் தொடர, நடந்த அகழ்வாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் போராட்டம், சட்ட முயற்சிகள் காரணமாக ஓரளவுக்கு கீழடி தப்பிப்பிழைத்து வருகிறது.

ops

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மைசூரு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அங்கு ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பல பொக்கிஷங்கள் பராமரிப்பின்றி இருப்பதால், கீழடியில் கண்டெடுக்கப்பட்டவை அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால், கீழடியிலேயே கண்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது.
தற்போது அங்கு அகழ் வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.30 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

keeladi

திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில் 0.810 ஏக்கர் நிலத்தில் காட்சி அறைகள், ஓய்வறை (கழிப்பறை), நூல் விற்பனை கடைகள் என அகழ் வைப்பகம் விஸ்தாரமாக அமைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.