கிழிந்த உடையில் பள்ளி மாணவி ! தங்கையின் ஆடையை கொடுத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டு !

 

கிழிந்த உடையில் பள்ளி மாணவி ! தங்கையின் ஆடையை கொடுத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டு !

பெங்களூருவில் கிழிந்த ஆடையுடன் சென்ற மாணவிக்கு ஆடை அணிவித்து மானத்தை காப்பாற்றிய இளைஞனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பெங்களூருவில் கிழிந்த ஆடையுடன் சென்ற மாணவிக்கு ஆடை அணிவித்து மானத்தை காப்பாற்றிய இளைஞனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பொதுவாக ஒரு சிறுமியோ, பெண்ணோ ஆடை சற்று விலகி இருந்தாலும், அல்லது கிழிந்து இருந்தாலும் அதை காமப் பார்வையோடு பார்ப்பவர்கள் அதிகம். ஆனால் பெங்களூருவில் சாலையோரம் பானிபூரி விற்கும் இளைஞன் கிழிந்த ஆடையுடன் சென்ற மாணவிக்கு தங்கையின் ஆடையை கொடுத்து உதவி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

pani

கர்நாடக மாநிலம் பெங்ளூரு மாநகரில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியில் வடநாட்டை சேர்ந்த சுசந்த் என்னும் இளைஞன் பானிபூரி கடை நடத்தி வருகிறார். தன்னுடைய தாய், தங்கையுடன் பள்ளிக்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்து,  வீட்டு வாசலிலேயே கடை போட்டுள்ளார் சுசந்த். அந்த வழியே பள்ளி மாணவ, மாணவிகள் செல்வது வழக்கம். அப்போது அந்த பள்ளியில் இருந்து ஒரு மாணவி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரது முதுகில் ஆடை கிழிந்திருந்ததை பார்த்த சுசந்த் உடனடியாக அந்த மாணவியை அழைத்து ஏன் இப்படி ஆடை கிழிந்துள்ளது என கேட்டார். அதற்கு அந்த மாணவி வறுமை நிலையில் இருப்பதாக கூறினார்.

girl

உடனடியாக தன்னுடைய தங்கையை அழைத்த சுசந்த் அவள் பயன்படுத்தும் ஸ்வெட்டரை எடுத்து வருமாறு கூறினார். பின்னர் அந்த மாணவிக்கு அணிவித்து அவர் வீடு வரை பத்திரமாக செல்ல தன்னுடைய தங்கையை அனுப்பி வைத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட மாணவியின் தாய் மறுநாள் சுசந்த் கடைக்கு வந்து கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.

girl

இதற்காக சுசந்துக்கு பணஉதவியும் செய்ய அந்த தாய் முன்வந்தபோது, அதை மறுத்த சுசந்த் தன்னுடைய தங்கையாக நினைத்துதான் உதவி செய்தேன் என்று நெகிழ்ச்சியாக பேசினார். குடும்பங்கள் சில வறுமை காரணமாக புதிய ஆடை வாங்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு ஊசி, ஒரு மீட்டர் நூல் அதிகபட்சம் 10 ரூபாய்தான் இருக்கும். வாங்கி ஆடையை தைத்து மாணவிக்கு அணிவித்து அனுப்பினால் அவளும் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார் என்பதே பெரும்பாலானோர் கருத்து