கிளிசரின் இல்லாமலேயே நடித்து அசத்தும் திறன் கொண்டவர் சூர்யா!

 

கிளிசரின் இல்லாமலேயே நடித்து அசத்தும் திறன் கொண்டவர் சூர்யா!

பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்து, ப்ரண்ட்ஸ் என பெரிதும் அவர் கதாபாத்திரம் பேசப்படாத படங்களில் தான் நடித்தார்.

அழும் காட்சிகளில் கிளிசரின் முக்கியம். சில நடிகர்கள் கிளிசரின் இல்லாமல் நடிப்பதைப் போன்று கதைக்கு முக்கியத்துவம் வரும் அழும் சீன்களில் கிளிசரின் இல்லாமல் நடிக்கிறார் சூர்யா.

suriya

கிளிசரின் போடாமல் நடிப்பதற்கு படத்தின் மீது அதீத ஈர்ப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தத முடியும் என்பது சூர்யாவின் தாரக மந்திரம். தன் தந்தை சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தில் இருந்தாலும், அவரின் உதவியை சிறிது கூட பயன்படுத்தாமல், தானே தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சூர்யா. சிறுவயதில் தந்தையின் கட்டுப்பாட்டில் வளர்ந்த சூர்யா நடிப்பு பக்கம் எட்டிப்பார்த்ததுக்கூட கிடையாது. 

suriya

முதன்முதலில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்து, ப்ரண்ட்ஸ் என பெரிதும் அவர் கதாபாத்திரம் பேசப்படாத படங்களில் தான் நடித்தார். அந்த நேரத்தில் தான் பாலாவின் பார்வை இவர் மேல் விழ நந்தா என்ற விதையை பாலா நட்டார். மேற்கண்ட படங்கள் அனைத்திலும் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டி பேசப்பட்டது. மேலும் காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் சூர்யாவின் நடிப்புக்கு வித்தாய் அமைந்தன. அதன்பின் நடித்த கஜினி, ஐயன், ஆதவன், சிங்கம் படங்கள் என அனைத்துமே மாஸ் ஹிட்தான். ஹீரோக்களை ரோல் மாடல்களாக வைத்துக்கொள்ளும் இன்றைய இளசுகளுக்கு நிஜ ஹீரோ சூர்யாதான் என்பது நிதர்சனம்!