கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன்! இப்ப தான் சந்தோஷமா இருக்கு – எஸ்.ஏ.சந்திர சேகர்

 

கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன்! இப்ப தான் சந்தோஷமா இருக்கு – எஸ்.ஏ.சந்திர சேகர்

கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன், தற்போது மகிழ்ச்சி அடைகிறேன் என இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன், தற்போது மகிழ்ச்சி அடைகிறேன் என இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றும் தமிழகத்தின்  மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பயணிப்போம் என்றும் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று தெரிவித்திருந்தார். கமல்ஹாசனின் கருத்துக்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக மக்களின் நலனுக்காக நிச்சயம் நானும் கமலும் இணைந்து பயணிப்போம் என தடாலடியாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இரு பெரு நடிகர்கள் திரையில் மட்டுமல்ல அரசியலிலும் இணைந்து பயணிப்போம் என பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Rajinikanth vs kamal

இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், “ரஜினியும், கமலும் சேர்ந்து பணியாற்றுவோம் என சொன்னது சந்தோஷமாக இருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்கள் என சொல்லி சொல்லியே அவரை வர வச்சுட்டாங்க… இருவரும் இணைந்து கட்சி தொடங்கக்கூட வாய்ப்புள்ளது. இருவருமே வலிமையான தலைவர்கள். கமல்ஹாசன் கிளாசான ஸ்டார், ரஜினிகாந்த் ஒரு மாஸான ஸ்டார். இருவருக்குமே நிறைய ரசிகர்கள் உள்ளனர். கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன், அந்த ஆசை இப்போது நடந்திருக்கிறது. அவர்கள் இருவரும் தனித்தனியாக நிற்கும் போது நிச்சயம் வெற்றி பிளவுப்பட்டுப்போகும் என இருவருக்கும் தெரியும். இதனால்தான் இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். எந்த வயதில் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். 

SA Chandrasekar

கடந்த இரு தினங்களுக்கு முன் கமல்ஹாசனின் 60 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியான உங்கள் நான் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ. சந்திர சேகர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கோடான கோடி ரசிகர்கள் காத்திருப்பதாக கூறிய அவர், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது என பேசியிருந்தார்.