கிலோ ரூ.800க்கு விற்பனையாகும் முருங்கைகாய்… அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

 

கிலோ ரூ.800க்கு விற்பனையாகும் முருங்கைகாய்… அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

வெங்காயத்தின் இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.   வெங்காய விளைச்சலில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்  பெய்த கனமழையால் வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகத்  தான் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. வெங்காயத்தின் இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

onion

இந்நிலையில் வெங்காயத்தைத் தொடர்ந்து முருங்கைக்காய் விலையும்  உச்சத்தில் உள்ளது. திருச்சி சந்தையில் முருங்கைகாய் கிலோ ரூ.650 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மதுரையில் ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 350 வரையிலும்,  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

ttn

வெங்காயத்தைத் தொடர்ந்து முருங்கை விலையும்  உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.