கிறிஸ்துமஸ் பைக் ரேஸ்.. பிரபல பாலிவுட் நடிகை ட்வீட் !

 

கிறிஸ்துமஸ் பைக் ரேஸ்.. பிரபல பாலிவுட் நடிகை ட்வீட் !

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி என்னும் பகுதியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பைக் ரேஸ் நடைபெறும்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக் கோலமாகக் காட்சியளித்தது. அமெரிக்கா, கலிபோர்னியா உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 

ttn

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி என்னும் பகுதியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பைக் ரேஸ் நடைபெறும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ரேஸில் பைக் மட்டுமல்லாது சைக்கிள் ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர். இதில், யாருடைய வாகனம் சிறப்பாக அலங்கரிக்கப் படுகிறதோ அவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

ttn

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னரே மக்கள் அவர்களது வாகனங்களை அலங்கரித்து, கிறிஸ்துமஸ் அன்று இரவு காண்போர்களுக்குப் பரிசுகள் கொடுத்துக் கொண்டே அலங்கரிக்கப்பட்ட பைக்கில் மான்டேரி நகர் முழுவதும் சுற்றி வந்தனர். இந்த ரேஸில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டனர். இரவில் வண்ணக்கோலமாக காட்சியளித்த இந்த பைக் ரேஸ், காண்போர் கண்களுக்கு விருந்ததாக அமைந்தது. 

ttn

இது குறித்து பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” இந்த கிறிஸ்துமஸ் பைக் ரேஸ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.