கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

 

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

ரவா சீடை.. பண்டிகை பலகாரம் + பள்ளிக் குழந்தைகளுக்கான சத்தான ஸ்நாக்ஸ்

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

தேவையான பொருட்கள்
ரவை            -1/4கிலோ
உடைத்த கடலை    -25கிராம்
வெண்ணெய்         – 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்     – 1 சிட்டிகை
சீரகம்             –1டீஸ்பூன்
மிளகு            – 1/2 டீஸ்பூன்

ரவா சீடை.. பண்டிகை பலகாரம் + பள்ளிக் குழந்தைகளுக்கான சத்தான ஸ்நாக்ஸ்

தேவையான பொருட்கள்
ரவை            -1/4கிலோ
உடைத்த கடலை    -25கிராம்
வெண்ணெய்         – 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்     – 1 சிட்டிகை
சீரகம்             –1டீஸ்பூன்
மிளகு            – 1/2 டீஸ்பூன்
எள்                 – 1 டீஸ்பூன்
தேங்காய்             – 2டீஸ்பூன் 
உப்பு             – தேவையான அளவு
எண்ணெய்         – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

ரவை மற்றும் உடைத்த கடலையை தனித்தனியாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும். இப்போது, துருவிய தேங்காயை நல்ல பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவை, உடைத்த கடலை, வதக்கிய தேங்காய் துருவல், சீரகத் தூள், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, வெண்ணெய்,எள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து லேசாகத் தண்ணீர் தெளித்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாக மாவை உருட்டி வைக்க வேண்டும்.
இப்போது மாவை தேவையான அளவு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி முடித்தவுடன், எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான ரவா சீடை ரெடி. நிறைய செய்து வைத்துக் கொண்டால், பண்டிகை முடிந்ததும் பள்ளிக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்புவதற்கும் வைத்துக் கொள்ளலாம். இருபது தினங்கள் வரையில் கெட்டுப் போகாமல் சுவையுடன் இருக்கும்.