கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

 

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

இனிப்புச் சீடை 

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1/4கிலோ
வெல்லம் – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – சிறிது

இனிப்புச் சீடை 

தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1/4கிலோ
வெல்லம் – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – சிறிது
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை
உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் நன்றாக வறுத்து, மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவேண்டும். அரிசி மாவையும் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில்  சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கரைந்தவுடன் தூசு போக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

அரிசி மாவில் சிறிது சிறிதாக வெல்லத் தண்ணீரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். உளுத்தம் மாவு , எள்ளையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பொரித்து எடுக்க வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சுவையான இனிப்பு சீடை தயார்!