கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று இல்லை! சாதிக்கும் சுகாதாரத்துறை

 

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று இல்லை! சாதிக்கும் சுகாதாரத்துறை

ஓசூரில் 43 வயது நபருக்கு கொரானா தொற்று என தகவல் வெளியான நிலையில் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று ஒருவருக்கு கூட இல்லை என்றபோதிலும் மாவட்டம் முழுவதும் தீவிர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட துணிக்கடைகள், பேக்கரிகள், சலூன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வளவு தீவிரமாக ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

corona-positive.jpg

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று பாசிட்டிவான நபரின் மாதிரி மீண்டும் கிங் ஆராய்ச்சி மருத்துவமனையில் ஆய்வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் 34 நாட்கள் தனிமையில் இருந்தார். எவ்வாறு அவருக்கு பாசிட்டிவ் வந்தது என்பது குறித்து மீண்டும் ஆய்வு நடப்பதால் இன்றைய பட்டியலில் கிருஷ்ணகிரி இடம்பெறவில்லை. கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது, அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. தற்போது வரை கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி