கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள்.. வேகமாக வந்த பந்து நெஞ்சில் பாய்ந்ததால் நேர்ந்த விபரீதம் !

 

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள்.. வேகமாக வந்த பந்து நெஞ்சில் பாய்ந்ததால் நேர்ந்த விபரீதம் !

இதில் நேற்று நடைபெற்ற 2 ஆவது சுற்றில் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் அணியும் அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் அணியும் களமிறங்கியது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சூனாம்பேடு அருகே அகரம் என்னும் கிராமத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வந்தன. அதில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அணிகளாக பிரிந்து ஆர்வத்துடன் பங்கேற்று வந்தனர். இதில் நேற்று நடைபெற்ற 2 ஆவது சுற்றில் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் அணியும் அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் அணியும் களமிறங்கியது. அதில்  சூனாம்பேடு அணியைச் சேர்ந்த சுனில் பேட்டிங் செய்ய எதிர் அணியைச் சேர்ந்த  கமலேஷ் பௌலிங் செய்தார். 

ttn

அப்போது கமலேஷ் வேகமாகப் பந்து வீசியதால், அந்த பந்து நேராக வந்த சுனிலின் நெஞ்சின் மீது பாய்ந்துள்ளது. இதனால், சுனில் மார்பை பிடித்துக் கொண்டு அங்கேயே விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சுனிலை  மதுராந்தகம் அரசு மருத்துவனிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சுனிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுனிலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுனிலுக்கு ஏற்கனவே உடலில் ஏதேனும் உபாதைகள் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.