கிரகங்கள் திதிசூன்யம் ஆவதால் ஏன் தீமைகள் உண்டாகின்றன?

 

கிரகங்கள் திதிசூன்யம் ஆவதால் ஏன் தீமைகள் உண்டாகின்றன?

திதிசூன்ய தோசம் என்பது விசசூன்ய தோசம் எனப்படும். சூன்யம் என்றால் ஒன்றுமில்லை என்றுபொருள். அதாவது ஜீரோ. ஆங்கிலத்தில் ராசி என்றும் கூறுவார்கள். 

திதிசூன்ய தோசம் என்பது விசசூன்ய தோசம் எனப்படும். சூன்யம் என்றால் ஒன்றுமில்லை என்றுபொருள். அதாவது ஜீரோ. ஆங்கிலத்தில் ராசி என்றும் கூறுவார்கள். 

6,8,12 தவிர மற்ற இடங்கள் திதிசூன்ய ராசிகளாக வந்து அக்கிரகங்களும் ராசிகளும் திதிசூன்ய தோச நிவர்த்தி அடையாவிட்டால் யோகமளிக்காமல் தீமைகளை தனது தசாபுத்திகளில் உள்ளன.

திதிசூன்யம் விளக்கு பெறும் ( விதிவிலக்குகள்) விதிகளை கீழே உள்ளன. 

-×- =+ என்ற விதிதான் இதற்கு அடிப்படை.

இந்த விதியை புரிந்துக்கொண்டால்போதும் திதிசூன்யதோசம் மட்டுமல்ல யோகி அவயோகியும் எப்போதும் யோகம் செய்யும் அல்லது தீமை செய்யும் என்பதை தெளிவாக தெரிய்துக்கொள்ளலாம். ( சூரியனின் பாகையை ( மேசம் முதல்) சந்திரனின் பாகையோடு கூட்டினால் நித்தியநாமயோகம்( யோகி,அவயோகி) கழித்தால் திதிசூன்யம்)

1. திதிசூன்யம் தோசம் பெற்ற ராசிகளில் ராகு ,கேது இருப்பது அல்லது திதிசூன்ய தோசம் பெற்ற கிரகங்கள் ராகு கேதுவுடன் இணைவு அல்லது சாரத்தில் இருப்பது முழுமையாக தொசநிவர்த்தியை தருவதோடு தசாக்காலங்களில் யோகமளிக்கும்.

2. திதிசூன்ய ராசிகள் 6,8,12 ஆகவருவது.

3. திதிசூன்ய ராசிகளில் 6,8,12 ஆம் அதிபதி இருப்பது.

4. திதிசூன்ய ராசிகளில் இயற்கை பாவிகள் இருப்பது தசாக்காலங்களில் நல்ல பலன்களை தரும்.

5. திதிசூன்ய தோசம் பெற்ற கிரகங்கள் 6,8,12 ஆம் அதிபதி நட்சத்திர சாரங்களில் இருப்பது. 

6. திதிசூன்ய தோசம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெறுவதால் தீயபலனை பெறுவது.

7. திதிசூன்ய ராசிகளில் உள்ள சுபகிரகங்கள் வக்கிரம் பெற்றால் யோகபலன்.

8. திதிசூன்ய ராசிகளில் உள்ள 6,8,12 ஆம் அதிபதிகள் வக்கிரம் அடைந்தால் தீயபலனை தரும்.

9. அவயோகி திதிசூன்ய ராசியில் இருந்தால் தீமை தராது.

10 .அவயோகி கிரகம் திதிசூன்ய தோசம் பெற்றால் நல்லபலன் தரும்.

திதுசூன்ய விதிவிலக்குகள் யோகி,அவயோகிக்கும் பொருந்தும்.பல ஜாதகங்களில் யோகம் தரும் கிரகதசாக்கள் யோகமளிக்காமல் போவதற்கும், அவயோகிகள் யோகமளிப்பதற்கும் இதுதான் அடிப்படை காரணம். 

யோகம், திதி, நாள், நட்சத்திரம், கர்ணம் இந்த அடிப்படை ஐந்து உறுப்புகள் சேர்ந்த்தே பஞ்சாங்கம் ஆகும்.