கிரகங்களின் அருட்பார்வை பெறுவதற்கு ஏற்ற உணவுகள் எது?

 

கிரகங்களின் அருட்பார்வை பெறுவதற்கு ஏற்ற உணவுகள் எது?

கிரகங்களின் அருட்பார்வை பெறுவதற்கு அந்த கிரகங்களுக்கு உகந்த தினத்தில், கிரகங்களின் தானியங்களால் சமைத்த உணவை உட்கொண்டால் நமக்கு முழு ஆசியும் கிடைக்கும். வாரத்தின் ஏழு நாட்களும், எந்த கிழமைகளில் எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

கிரகங்களின் அருட்பார்வை பெறுவதற்கு அந்த கிரகங்களுக்கு உகந்த தினத்தில், கிரகங்களின் தானியங்களால் சமைத்த உணவை உட்கொண்டால் நமக்கு முழு ஆசியும் கிடைக்கும். வாரத்தின் ஏழு நாட்களும், எந்த கிழமைகளில் எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த தினம். அன்று கேரட் சூப், கோதுமை பாயசம், கேரட் அல்வா, கோதுமை அல்வா, கோதுமை சாதம், சப்பாத்தி, கேசரி, பரங்கிக்காய் சாம்பார், மாதுளை ஜூஸ், பூரி போன்றவைகளை சாப்பிடலாம். 

planets

திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள். அன்று பச்சரிசி சாதம், முள்ளங்கி, கல்கண்டு சாதம், பால், கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், தேங்காய் சாதம், தயிர் சாதம், இட்லி போன்றவைகளை உண்ணலாம்.
செவ்வாய்கிழமை செவ்வாய் கிரகத்திற்கு உகந்த தினம். அதனால் செவ்வாய்கிழமைகளில் பீட்ரூட் அல்வா, துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பேரிச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, மிளகாய் துவையல், ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை போன்றவைகளை உட்கொள்ளலாம்.
புதன் கிரகத்திற்கு புதன் கிழமைகளில் வேப்பம்பூ ரசம், கீரை தோசை, பாகற்காய் தொக்கு, முருங்கைக்காய் சூப், கொய்யாப்பழம் சேர்த்த பழக்கலவை, பாசிப்பயிறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி, வாழைப்பழம் முதலானவைகளை சாப்பிடலாம்.
வியாழக்கிழமையன்று குரு பகவானுக்கு உகந்த தினம். அன்று தயிர் வடை, சுக்கு காபி அல்லது கஷாயம், கார்ன் சூப், கடலைப்பருப்பு கூட்டு, கடலைப்பருப்பு வடை, சுண்டல், எலுமிச்சை சாதம், சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம் போன்றவைகளை சாப்பிடலாம். 

food

வெள்ளிக்கிழமை சுக்கிரனின் தினம். அன்று வாழைத்தண்டு ஜூஸ், பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, வாழைத்தண்டு பொரியல், ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், பாசிப்பருப்பு சாலட், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், நீர் மோர், வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிடலாம்.
அதே போல் சனிக்கிழமைகளில், உளுந்து சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை போன்றவைகளில் எதையாவது ஒன்றை உட்கொள்ளலாம். இப்படி கிரகங்களின் ஆதிக்க தினத்தில், அவற்றிற்கு பிடித்தமான உணவுகளை உட்கொண்டு வந்தால், வாரம் முழுவதும் நாமும் அனைத்து விதமான சத்தான உணவை உட்கொண்ட மாதிரியும் இருக்கும்.