கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்ற சென்ற சிறுவனும் உயிரிழப்பு : கரூர் அருகே நேர்ந்த சோகம்!

 

கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்ற சென்ற சிறுவனும் உயிரிழப்பு : கரூர் அருகே நேர்ந்த சோகம்!

மாடுகளை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு வெள்ளியணை அருகே உள்ள கிணறு ஒன்றில் தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளனர்.

கரூர் மாவட்டம் மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி வெள்ளியணை  அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நவீன்குமாரும் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் என்ற சிறுவனும் நேற்று ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் விடுமுறை அளிக்கபட்டுள்ள நிலையில், இவர்கள் மேய்ச்சலுக்காக மாடு ஓட்டிக் கொண்டு சென்றுள்ளனர்.  

ttn

நேற்று வெயில் அதிகமாக இருந்ததால் இவர்களுக்கு தாகம் அதிகமாக இருந்துள்ளது. அதனால், மாடுகளை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு வெள்ளியணை அருகே உள்ள கிணறு ஒன்றில் தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் கிணற்றுக்குள் விழ மற்றொரு சிறுவன் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால், இருவருமே கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

மாடு மேய்க்க சென்ற சிறுவர்கள் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், வெள்ளியணை பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். இதனிடையே, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர்கள் சிறுவர்களின் சடலங்களை மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாயனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 சிறுவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.