கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாட்டி: நெகிழ வைக்கும் சம்பவம்!

 

கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாட்டி: நெகிழ வைக்கும் சம்பவம்!

கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் பாட்டி கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி: கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் பாட்டி கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிணற்றில் விழுந்த குழந்தை

well

 

பூந்தமல்லியை சேர்ந்த ஹரிபிரியா என்பவருக்கு  பிரக்யா என்ற  1½ வது  பெண் குழந்தை உள்ளது. ஹரிபிரியா, வேலைக்கு செல்வதால் பாட்டி கிருபாவதி குழந்தையைக் கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அருகில் இருந்த கிணற்றில் எட்டி பார்த்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குழந்தை விழுந்து விட்டது. இதை கண்ட பாட்டி கிருபாவதி சற்றும் தாமதிக்காமல் குழந்தையைக் காப்பாற்றக் கிணற்றில் குதித்தார். இதையடுத்து நீரில் குழந்தை மூழ்கி விடாமல் இருக்கக் குழந்தையை மேற்புறமாகத் தூக்கி கொண்டு, காப்பாற்றும்படி கத்தியுள்ளார்.

காப்பாற்றிய பாட்டி 

kiruba

 

அவரின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் சிலர், கிணற்றுக்குள் இறங்கி குழந்தையைப் பத்திரமாக மேலே கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் கிருபாவதியால் மேலே வர இயலவில்லை. இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி கிருபாவதியை பத்திரமாக மீட்டனர். 40 அடி ஆழமும், 3 அடி அகலமும் கொண்ட  கிணற்றில் 4 அடிக்கு தண்ணீர் இருந்துள்ளது. மேலும் குழந்தை விழும் போது,அருகிலிருந்த மோட்டார், குழாய்கள் மீது மோதாமல் இருந்ததால் 
எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளது. கிருபாவதிக்கு  லேசான காயம் ஏற்பட்டதால், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையைக் காப்பாற்றிய கிருபாவதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இதையும் வாசிக்க:  ரகசிய திருமணம் செய்து கொண்டது ஏன்? சிம்பு பட நாயகி திடீர் விளக்கம்!