கிட்னி திருடுற கூட்டம் உலகம் பூரா இருக்கும்போல!

 

கிட்னி திருடுற கூட்டம் உலகம் பூரா இருக்கும்போல!

சோஃபியாவின் உடலில் கர்ப்பப்பை உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் காணவில்லையாம். உடல் உறுப்புகளுக்காக தன் மகள் கொலைகூட செய்யப்பட்டிருக்கலாம், விசாரித்து உண்மையை கண்டு சொல்லுங்கள் என துருக்கி அதிபருக்கு சோஃபியாவின் தந்தை கடிதம் எழுதி காத்திருக்கிறார்.

ரஷ்யாவின் 16 வயது மாடல், சோஃபியா வடிவான பெண், குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக துருக்கிக்கு சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் சோஃபியாவுக்கு திடீர் கடுமையான வயிற்றுவலி. உடனடியாக துருக்கியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோஃபியாவை அனுமதிக்கிறார்கள். முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு கடுமையான குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் துருக்கி மருத்துவர்கள், உடனடியாக அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என அறிவுறுத்தவே, சோஃபியாவின் குடும்பத்தினரும் ஒப்புக்கொள்கிறார்கள். தொடர்ந்து 8 மணி நேரம் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் இருக்கும் சிகப்பு விளக்கு எரிகிறது. ஆம் சோஃபியா விஷயத்தில் கடவுள் அவ்வளவு இரக்கம் காட்டவில்லை.

Sofia

சுற்றுலா வந்த இடத்தில் தங்கள் ஆசை மகளை பறிகொடுத்த சோகத்தில், அவரது உடலோடு ரஷ்யா திரும்பும் பெற்றோர், மகளின் உடலை கூராய்வுக்கு அனுமதிக்கின்றனர். முடிவுகள் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியாகின்றனர் பெற்றோர். விஷயம் என்னன்னா, சோஃபியாவின் உடலில் கர்ப்பப்பை உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் காணவில்லையாம். உடல் உறுப்புகளுக்காக தன் மகள் கொலைகூட செய்யப்பட்டிருக்கலாம், விசாரித்து உண்மையை கண்டு சொல்லுங்கள் என துருக்கி அதிபருக்கு சோஃபியாவின் தந்தை கடிதம் எழுதி காத்திருக்கிறார். காய்ச்சல்னு போனா கிட்னி திருடி விக்கிற கும்பல் உலகம் முழுக்க சுத்துது!