காஷ்மீர் விவகாரத்தில் வெற்றிதான்… ஆனால் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கவில்லை…. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம் பாகிஸ்தானுக்கு….

 

காஷ்மீர் விவகாரத்தில் வெற்றிதான்…  ஆனால் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கவில்லை…. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம் பாகிஸ்தானுக்கு….

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் மற்றும் சீனா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு வெற்றிதான் என பாகிஸ்தான் கூறுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் வெற்றிதான்…  ஆனால் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கவில்லை…. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம் பாகிஸ்தானுக்கு….

கடந்த 5ம் தேதியன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பலத்த ஆதரவு கொடுத்தனர். ஆனால் நமது பங்காளி பாகிஸ்தான் வழக்கம் போல் குதி குதியென குதித்தது.

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை எதிர்த்து ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையீடு செய்தது. கூடவே பாகிஸ்தானின் நெருங்கி தோஸ்த் சீனாவும் வக்காலத்து வாங்கியது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலிடம் இருநாடுகளும் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து நேற்று இரவு ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது.

அனைவரும் எதிர்பார்த்தது மாதிரியே அந்த ரகசிய ஆலோசனை கூட்டம் இந்தியாவுக்கு சாதகமாக முடிந்தது. பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய ஆலோசனை கூட்டத்தில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாகிஸ்தானும், சீனாவும் சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்ததை, இந்தியா ராஜதந்திர நடவடிக்கை வாயிலாக முறியடித்தது. 370 சட்டப்பிரிவு நீக்கியது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் அதில் வெளி விவகாரங்களுக்கு சம்பந்தம் இல்லை என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையத் அக்பரூதீன் அழுத்தம் திருத்தமாக கூறினார்.

மலீஹா லோதி

ஆலோசனை கூட்டத்தின் இறுதியில், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கோரிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்க மறுத்து விட்டது. மேலும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கை கூட கொடுக்கவில்லை. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவும் மீண்டும் தோல்வி கண்டது.

இருப்பினும், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கும் முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இந்த விவகாரத்தில் எந்த முடிவும், வாக்கெடுப்பும் மற்றும் அறிவிப்புகளும் எடுக்காமல் முடிவடைந்தது என தெரிவித்தார்.