காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளை பட்டியலிட்ட அமித் ஷா

 

காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளை பட்டியலிட்ட அமித் ஷா

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. (ஐக்கிய நாடுகள்) சபைக்கு முன்னாள் பிரதமர் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என அமித் ஷா குற்றச்சாட்டினார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: சுதந்திர அடைந்த சில ஆண்டுகளில் காஷ்மீர் விவகாரத்தை நம் நாட்டின் முதல் பிரதமர் சர்வதேச பிரச்னையாக்கியது பெரிய தவறு. 1948ல் ஐ.நா. சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை கொண்டு சென்றது இமாலய தவறு. அது இமாலய தவறை காட்டிலும் பெரிதாகும்.

அமித் ஷா

முன்னாள் பிரதமர் நேரு செய்த இரண்டாவது தவறு. காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்காக தவறான ஐ.நா.வின் சாசன பிரிவை தேர்வு செய்தது. சட்டப்பிரிவு 35ஐ தேர்வு செய்ததற்கு பதிலாக 51ஐ தேர்வு செய்து இருக்க வேண்டும். சட்டப்பிரிவு 35ன்படி உறுப்பு நாடுகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் பாதுகாப்பு கவுன்சில் அல்லது ஐ.நா.  பொது சபை கவனத்துக்கு செல்ல சட்டப்பிரிவு 35 பயன்படுத்தப்படும். ஆனால் சட்டப்பிரிவு 51, உறுப்பு நாடுக்கு எதிராக ஆயுத தாக்குதல் நடந்தால் தனிநபர் அல்லது கூட்டு தற்காப்புக்கான உள்ளார்ந்த உரிமையை சட்டப்பிரிவு 51 வழங்கும்.

காஷ்மீர் விவகாரத்தை வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் அது தற்போது சர்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்து இருக்காது. 1947ல் நாடு சுதந்திர அடைந்த போது 631 அரச அரசுகள் இருந்தன. 630 அரசு அரசுகளை வல்லபாய் படேல் ஒன்றாக இணைத்தார். பிரதமர் நேரு ஒரே ஒரு அரச அரசை (காஷ்மீர்) இணைத்தார். அந்த ஒன்றும் இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. 1947 அக்டோபர் அக்டோபர் 27ம் தேதி தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் காஷ்மீர் பகுதிக்கு ராணுவத்தை அனுப்பியிருந்தால் அது இப்பம் நம் நாட்டின் பிரச்னையில்லாத பகுதியாக இருந்திருக்கும்.

வல்லபாய் படேல்

ஆனால் அப்போது அரசு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தது. நாம் போரில் வெற்றி பெற கூடிய நேரத்தில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்காவிட்டால் இன்று அந்த பகுதி நம்முடையதாக இருந்திருக்கும். இருப்பினும், நரேந்திர மோடி அரசின் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுடன் காலம் தற்போது இந்தியாவுக்கு சாதகமாக மாறி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த தொடர் தவறுகளை சரிசெய்வதில் முதல் நடவடிக்கைதான் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்தது நீக்க முடிவு.

பிரதமர் மோடி

காஷ்மீர் வரலாறு திரிக்கப்பட்டு நாட்டின் முன்வைக்கப்பட்டது. உண்மையை எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மாநிலங்களில் ஜம்மு அண்டு காஷ்மீர் அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.