காஷ்மீர் விவகாரத்தில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என பேசிவிட முடியாது: வைகோவை மறைமுகமாக சாடிய திருமா!

 

காஷ்மீர்  விவகாரத்தில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என பேசிவிட முடியாது: வைகோவை மறைமுகமாக சாடிய திருமா!

காஷ்மீரை இந்தியா கையாள நேருவின் சாதுரியமே காரணம் என்று விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர்  விவகாரத்தில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என பேசிவிட முடியாது: வைகோவை மறைமுகமாக சாடிய திருமா!

சென்னை: காஷ்மீரை இந்தியா கையாள நேருவின் சாதுரியமே காரணம் என்று விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க கூட்டணியிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ,  நேருவின் தவறான கொள்கை மற்றும் காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் இந்த நிலைமைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றச்சாட்டினார்.இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோவுக்கு எதிரி பா.ஜ.க.வா? காங்கிரசா? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியிலிருந்து கொண்டு, காங்கிரசை விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார்.

thiruma

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், காஷ்மீரை இந்தியா கையாள நேருவின் சாதுரியமே காரணம்.  இந்த பிரச்னையை பேச வேண்டும் என்றால் 1940களுக்கே சென்றுதான் பேச வேண்டும். காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததற்குக் காரணம் 370 வது பிரிவின் சிறப்பு அந்தஸ்த்தால் தான். அதனால் இந்த விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசி விட முடியாது’ என்றார்