காஷ்மீர் மக்களுக்காக போர் தோடுப்பேன் – பாக். பிரதமர் சூளுரை..!

 

காஷ்மீர் மக்களுக்காக போர் தோடுப்பேன் – பாக். பிரதமர் சூளுரை..!

காஷ்மீர் மக்களை இந்திய பிடியிலிருந்து மீட்க அணு ஆயுத போர் நடத்தவும் தயாராக இருக்கிறோம். உலக அமைதிக்காக அமைதி காக்கிறோம் என பாகிஸ்தான் பிரதமர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மக்களை இந்திய பிடியிலிருந்து மீட்க அணு ஆயுத போர் நடத்தவும் தயாராக இருக்கிறோம். உலக அமைதிக்காக அமைதி காக்கிறோம் என பாகிஸ்தான் பிரதமர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தனிச் சிறப்பு அந்தஸ்து மிக்க மாநிலமாக கடந்த அரை நூற்றாண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இருந்து வந்தது. அங்கு குண்டுவெடிப்புகள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து சீரான இடைவெளியில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் மக்கள் பலர் இன்னுயிரை இழந்துவந்தனர். இதனை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவும், மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் நோக்கிலும் இத்தனை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து தற்போதைய மத்திய அரசால் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ரத்து செய்யப்பட்டது. 

மேலும் இதனை இந்தியாவிற்குள் ஒரு அங்கமாக இணைத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும், பாகிஸ்தானிலும் தொடர்ந்து எதிர்ப்புகள் வெடித்தன.

காஷ்மீரை மீண்டும் மீட்க்கும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, சவுதி போன்ற நாடுகளிடம் உதவிக்கரம் நீட்டினார். இதற்கு சீனா மட்டுமே பகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது. இந்நிலையில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தாக்குதல் நடத்தும் எண்ணத்தை தவித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவினை மேற்கொள்ளுமாறு அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். அதன்பிறகு, இருவரும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

​​இம்ரான் கான்

அப்போது நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த இம்ரான் கான் பேசுகையில், லட்சக்கணக்கான ராணுவ வீரர்களின் பிடியில் காஷ்மீர் மக்கள் சிக்கியுள்ளார்கள். அவர்களை மீட்டகவே நானும் எனது மக்களும் போராடி வருகிறோம். உலகில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, அவர்களை சுதந்திரமாக அடைத்து வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

தற்போது, காஷ்மீர் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை நீக்கி, அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். இல்லையேல், எந்நேரமும் அணு ஆயுதப்போர் இருநாடுகளுக்கும் இடையே நடப்பது உறுதி என்றார்.