காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள் எனக்கு ஒரு கால் வந்தது… ரகசியத்தை வெளியிட்ட மம்தா பானர்ஜி…

 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள் எனக்கு ஒரு கால் வந்தது… ரகசியத்தை வெளியிட்ட மம்தா பானர்ஜி…

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்னிடம் போனில் பேசினார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தொலைபேசியில் என்னிடம் பேசினார். நாங்கள் பயத்தில் உள்ளோம். நாங்கள் ஏதாவது பிரச்சினையை சந்தித்தால் எங்களுடன் நீங்கள் நிற்பீர்களா? என்று கேட்டார். துரதிருஷ்டவசமாக என்னால் அவர்களுடன் நிற்க முடியவில்லை.

போன் அழைப்பு

உடல் அளவில் இல்லையென்றாலும் மனதளவில் நான் எப்போதும் அவர்களுடன் இருக்கிறேன். 370 சட்டப்பிரிவை நீக்கியது குறித்து நான் அதிகம் பேசவிரும்பவில்லை. ஆனால்  நீக்கிய நடைமுறை தவறு. ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு உரிமை இல்லையா?  இன்று நான் இந்த கேள்வியை கேட்டால் சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறையால் நான் கைது செய்யப்படலாம்.

புதிய யூனியன் பிரதேசங்கள்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் பேசி அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என நான் இன்னும் நம்புகிறேன். அங்கு என்ன நடக்கிறது என்பது காஷ்மீர் மக்களுக்கே தெரியாது. காஷ்மீர் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இன்று நடப்பது எல்லாம் உங்களது எதிர்காலம் இல்லை எனவே கவலைப்பட வேண்டாம் அவர்களிடம் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.