காஷ்மீரை பிரிக்கிறாங்கோ ஓடியாங்கோ ஓடியாங்கோ – பாகிஸ்தான் பதற்றம்

 

காஷ்மீரை பிரிக்கிறாங்கோ ஓடியாங்கோ ஓடியாங்கோ – பாகிஸ்தான் பதற்றம்

சர்வதேச அளவில் பிரச்னைக்குரிய பகுதியாக அறியப்பட்டுள்ள காஷ்மீரில், இந்தியா தன்னிச்சையான, விதிகளைமீறி முடிவை எடுத்துள்ளது என்றும், காஷ்மீர் மக்களுக்கு எதிரானது இந்த முடிவு என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், ஜம்மு&காஷ்மீர் ஒருபக்கம், லடாக் ஒருபக்கம் என தனித்தனியாக யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்துவிட்டது மத்திய அரசு. வெறும் வாயை மெல்வதில் பாகிஸ்தானை மிஞ்சமுடியாது, இப்போது அவர்களுக்கு அவல் வேறு கொடுத்ததுபோலாகிவிட்டது. காஷ்மீரை காப்பாற்ற ‘என்ன’ வேண்டுமானாலும் செய்வோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. துணைக்கு ஐ.நா மற்றும் நட்பு நாடுகளையும் அழைத்துள்ள பாகிஸ்தான், இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கவேண்டாம் எனவும் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

JK after 370 revocation

சர்வதேச அளவில் பிரச்னைக்குரிய பகுதியாக அறியப்பட்டுள்ள காஷ்மீரில், இந்தியா தன்னிச்சையான, விதிகளைமீறி முடிவை எடுத்துள்ளது என்றும்,  காஷ்மீர் மக்களுக்கு எதிரானது இந்த முடிவு என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாருங்க ப்ரோ, நாட்டுல இருக்குற எங்களுக்குமே இந்த முடிவுல அவ்வளவா விருப்பம் இல்ல. ஆனாலும் இது எங்க பிரச்னை, நாங்க பாத்துக்குறோம், நீங்க உள்நாட்டுல ஊட்டி வளர்த்த அந்த 40,000 தீவிரவாதிகளை அடக்குற வழியைப் பாருங்க, நன்றி வணக்கம்.