காஷ்மீரைப் போல வடகிழக்குக்கு வழங்கப்படும் 371 வது பிரிவு நீக்கப்படாது! – அமித்ஷா உறுதி

 

காஷ்மீரைப் போல வடகிழக்குக்கு வழங்கப்படும் 371 வது பிரிவு நீக்கப்படாது! – அமித்ஷா உறுதி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. அன்றிலிருந்து காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் வேண்டும் என்று பா.ஜ.க கூறி வருகிறது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது போல் வடகிழக்கு மாநிலங்களுக்கு 371வது சட்டப் பிரிவை நீக்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. அன்றிலிருந்து காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் வேண்டும் என்று பா.ஜ.க கூறி வருகிறது. இதனால், வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 371வது பிரிவும் நீக்கப்படலாம் என்ற அச்சம் அப்பகுதியில் நீடித்து வருகிறது.

article-370

இது குறித்து இட்டாநகரில் நடந்த அருணாச்சல பிரதேசத்தின் 34வது தின விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா ஒரு புது உறுதி மொழி அளித்துள்ளார். அப்போது அவர், “பிரதமர் மோடி பொறுப்பேற்ற 2014ம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிறபகுதியுடன் புவியியல் அடிப்படையில் மட்டுமே இணைந்திருந்தன. ஆனால் மோடி பதவி ஏற்ற பிறகு நாட்டின் பிற பகுதியுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளது.

amit-shah-089

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது போல் வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்படும் 371வது பிரிவும் நீக்கப்படும் என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதுபோன்ற எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. இந்த பகுதியில் உள்ள பயங்கரவாத பிரச்னைகளை தீர்க்க மோடி அரசு உறுதி ஏற்றுள்ளது. 2024ம் ஆண்டு நாங்கள் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் இருக்காது” என்றார்.