காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்வு! தொடரும் இணையதள துண்டிப்பு…

காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்வு! தொடரும் இணையதள துண்டிப்பு…

காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளன. 

காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்வு! தொடரும் இணையதள துண்டிப்பு…

காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட வசதியாக இந்த தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் போராட்டங்கள், வன்முறைகள் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் இணையதள இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது. தூர்தர்ஷன் உள்ளிட்ட 3 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் ஆலோசனை நடத்தினார்.

பதற்றமான இத்தருணத்தில் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்து இருவரும் பேசினர். முன்னதாக அஜித் தோவல் ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.