காஷ்மீரில் அரசு கட்டிடங்களில் பறக்க தொடங்கிய தேசிய கொடி……

 

காஷ்மீரில் அரசு கட்டிடங்களில் பறக்க தொடங்கிய தேசிய கொடி……

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கப்பட்டதையடுத்து, தற்போது அரசு கட்டிடங்களில் பழைய மாநில கொடியை நீக்கி விட்டு தேசிய கொடியை ஏற்றும் பணிகள் ஜோராக நடைபெற்று வருகிறது.

கடந்த 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும், ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 மசோதாவை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீரில் தற்போது கடும் கட்டுப்பாடுகள் நிலவுகிறது. இருப்பினும் காஷ்மீரில் அரசு அலுவலகங்கள் பழைய மாதிரி இயங்க தொடங்கி விட்டன.

ஸ்ரீநகர் சிவில் செயலக கட்டிடத்தில் தேசிய கொடி

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து போய் விட்டதால், தற்போது அரசு கட்டிடங்களில் இதுவரை இருந்த மாநில கொடியை நீக்கி விட்டு தேசிய கொடியை ஏற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் உள்ள சிவில் செயலக கட்டிடத்தில் நேற்று பழைய மாநில கொடியை நீக்கி விட்டு தேசிய கொடி ஏற்பட்டது.

காஷ்மீர் நிலவரம்

தற்போது காஷ்மீர் முழுவதும் தேசிய கொடி பறப்பது பெருமையாக உள்ளது. மேலும், காஷ்மீர் மக்களும் அரசு கட்டிடங்களில் தேசிய பறப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.