காஷ்மீரிகளை தாக்கிய காவி கும்பல் ; ஒருவர் கைது – வீடியோ

 

காஷ்மீரிகளை தாக்கிய காவி கும்பல் ; ஒருவர் கைது – வீடியோ

உலர் பழங்கள் விற்கும் காஷ்மீரிகள் இருவரை தாக்கிய காவி கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

லக்னோ: உலர் பழங்கள் விற்கும் காஷ்மீரிகள் இருவரை தாக்கிய காவி கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

baj

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரிகள் மீது வன்மத்தை உமிழ்கிறது காவி கும்பல்கள். இந்து மகா சபை, பஜ்ரங் தளம் ஆகியவை காஷ்மீரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். லக்னோவில் நேற்று உலர் பழங்கள் விற்பனை செய்யும் காஷ்மீரிகள் இருவர் தாக்கப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, தாக்கியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவி கும்பலிடம் இருந்து காஷ்மீரிகளை அங்குள்ள மக்கள் காப்பாற்றியுள்ளனர். எதற்காக இவர்களை தாக்குகிறீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்ப, அவர்கள் காஷ்மீரிகள் என ஒருவர் பதில் சொல்லியிருக்கிறார். சிஆர்பிஎப் வீரர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதற்கு, காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் ஆகும் என சமூக வலைதளத்தில் காவி கும்பலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.