காவேரி தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

 

காவேரி தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை: அண்ணாநகரில் உள்ள காவேரி தொலைக்காட்சி நிறுவனரின் அலுவலகம் முன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் காவிரி தொலைக்காட்சி, கடந்த சில மாதங்களாக அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவந்தது. மாதக்கணக்கில் சம்பள பாக்கி இருந்து வந்துள்ளது.  நிதி நிலை சிக்கலே இதற்குக் காரணம் என்று கூறிய நிர்வாகம், மறுபுறம் ஆட்களை பணியில் சேர்ப்பதையும் நிறுத்தவில்லை.  இதையடுத்து ஒரேநாளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது காவிரி நிறுவனம். இதுகுறித்து நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியும் எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள காவேரி தொலைக்காட்சி நிறுவனரின் அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.  காரணம், கொடுக்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை கேட்கச்சென்ற ஊழியர்களை தள்ளிவிட்ட அதன் இயக்குநர் இளங்கோவனோ , ‘என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ… எவன்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ. இங்கேயே கிடந்தாலும் பரவால்ல. வாட்ச்மேனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் எனக்கு மிச்சம்!’ என திமிருடன் பதிலளித்துவிட்டு, அங்கிருந்த பெண்களை தள்ளிவிட்டு காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.இதனால் ஊழியர்கள் அண்ணாநகர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.