காவேரிப் பாக்கம் கல்மீன் சாப்பிட்டு இருக்கிறீர்களா.!?

காவேரிப் பாக்கம் கல்மீன் சாப்பிட்டு இருக்கிறீர்களா.!?

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலதின் நந்தி துர்க்கம் மலைத்தொடரில் உற்பத்தி ஆகிறது.அது, நந்தி துர்கத்தில் இருந்து புறப்பட்டு 450 கி.மீ ஓடி வங்கக்கடலில் கலக்கிறது.அந்த ஆற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப் பட்டிணத்தில் ஒரு அணை கட்டப்பட்டு இருக்கிறது.கிருஷ்ணகிரி டூ தருமபுரி சாலையில் சரியாக எட்டுக் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது காவேரிப்பாக்கம்.அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் போனால் காவேரிப்பட்டினம் அணை வருகிது.

fish

அங்கே,பத்து பன்னிரண்டு மீன் கடைகள் இருக்கின்றன.சூடான பெரிய தவாவில் வகை வகையான மீன்களை வறுத்து வைத்துக்கொண்டு அழைக்கிறார்கள்.ஆனால்,திருநெல்வேலி அல்வா என்ற பெயரில் ஊரெல்லாம் கடை இருந்தாலும்,இருட்டுக்கடை அல்வாதானே ஃபேமஸ் ?
அப்படி,காவேரிப் பட்டிணத்தில் ஃபேமஸ் கே.பி.என் என்கிற கடைதான்.

fish

சென்னை , பெங்களூர் போன்ற மகா நகர்களில் இருந்து போகிறவர்களுக்கு மட்டுமல்ல தர்மபுரி ஆட்களுக்கே அந்த சின்னஞ்சிறு கடையை உணவகம் என்று ஒப்புக்கொள்வதில் மனத்தடைகள் இருக்கும்.ஆனால்,இந்தச் சின்னஞ்சிறு கே.பி.என் கடையில் ஜிலேபி மீன் போல இருக்கும் வறுத்த ‘ கல்மீன் ‘ ஒன்றில் ஒரு சிறு துண்டைப் பிய்த்து வாயில் போட்ட உடன் அந்த மீனோடு சேர்ந்து உங்கள் வைராக்கியமும் கரைந்துவிடும்.

fish

ஊறும் எச்சிலை விழுங்கி விட்டு ஓடிப்போய் ஒரு நாற்காலியில் இடம்பிடித்து விடுவீர்கள்.வறுத்த கல்மீன் மட்டுமல்ல இங்கே சாப்பாடும் உண்டு.
மிக எளிய உணவு.சோறு, கட்லா மீன் துண்டோடு கூடிய மீன் குழம்பு.
தேங்காய் எல்லாம் சேர்க்காத,ரசத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு தண்ணிக் குழம்புதான் அது.

fish

ஆனால்,எந்த ரசாயன சேர்மங்களும் இல்லாததால் அந்த மீன்குழம்பைத் தொட்ட கை இரவு உணவு.வரை மணக்கிறது.கூட்டுப் பொரியல் எல்லாம் கிடையாது.சோறு மீன் குழம்பு,ரசம் பொரித்த கல்மீன்,இவ்வளவுதான்.ஆனால் ஒரு முறை சாப்பிட்ட கைகள் பெங்களூரோ , கோவையோ எங்கே போவதாக இருந்தாலும் இந்த காவேரிப்பட்டினம் கே.பி.என் உணவகத்தை நோக்கி தானாகத் திரும்புவதே கல் மீன் சுவையின் வெற்றி!.