காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; அனுமதி கோரி வேதாந்தா விண்ணப்பம்!’

 

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; அனுமதி கோரி வேதாந்தா விண்ணப்பம்!’

புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன

சென்னை: காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும், காவிரி டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

hydro carbon

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடும் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. வேதாந்தா நிறுவனம் 274 கிணறுகளை அமைக்கவும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 67 கிணறுகளை அமைக்கவும் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

oil rig

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் தனது ஸ்டெர்லைட் ஆலை மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்கள் எதிர்க்கும் மற்றொரு திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்திருப்பது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

sterlite

அத்துடன், அந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால் அது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிங்க

கடமையை செய்து முடித்த உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்: என்ன தெரியுமா?