காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் மண்டலமாக அறிவிப்பு… அரசிதழ் வெளியீடு!

 

காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் மண்டலமாக அறிவிப்பு… அரசிதழ் வெளியீடு!

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் மண்டல சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார்.

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

ttn

அதன் படி கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் மண்டல சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர், காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் பேரில் இன்று சட்டமாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.