காவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் – பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ!

 

காவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் – பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ!

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் இருவரும் முத்தமிட்டு அத்துமீறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி: போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் இருவரும் முத்தமிட்டு அத்துமீறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன், தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலில் கிடந்த ஷூவை கழற்றி அடித்ததாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் பெண் காவலர் ஒருவர் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்றதாக சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன், இந்த நிகழ்வு பெண் போலீஸ் ஒத்துழைப்புடன் தான் நடந்தது. ஆனால் பெண் போலீஸ் பொய்யான புகார் கொடுத்ததால் விசாரிக்காமலேயே எனக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார். 

இதனால் இச்சம்பவத்தில் உண்மையை கண்டறிய, சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் பெண் போலீஸ் இருவரும் சேர்ந்து நடத்திய லீலைகள் வெளியாகி மற்ற காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று  சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் போலீஸ் நிலையத்திற்கு வருகிறார். அங்கு பெண் போலீஸ் மட்டும் தொலைபேசி உள்ள மேஜை அருகில் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவரது அருகில் வந்த பாலசுப்பிரமணியன், பெண் போலீஸை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிடும் லீலை தொடங்குகிறது. பின்னர் சற்று நேரத்தில் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் கிளு கிளு காட்சிகளும் அரங்கேறுகிறது. 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியில், அந்த பெண் போலீஸ் கொஞ்சம்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவரது முழு ஒத்துழைப்புடன்தான் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.