காவல்துறை உதவியோடு தொடரும் ராமேஸ்வர கடற்கரை கொள்ளைகள்; பக்தர்கள் கவனத்திற்கு?!..

 

காவல்துறை உதவியோடு தொடரும் ராமேஸ்வர கடற்கரை கொள்ளைகள்; பக்தர்கள் கவனத்திற்கு?!..

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தரிசனம் காணச் செல்பவர்கள் அங்குள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடிவிட்டு செல்வது வழக்கம். அந்த பகுதியில் தொடர் கொள்ளைகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலங்களில் ராமேஸ்வரம் கோவிலுக்கு முக்கியமான இடம் உண்டு. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெளிநாட்டவர்கள் அங்கே வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் பக்தர்களின் உடைமைக்கு அங்கே பாதுகாப்பு குறைந்து வருகிறது.

fsfad

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தரிசனம் காணச் செல்பவர்கள் அங்குள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடிவிட்டு செல்வது வழக்கம். அந்த பகுதியில் தொடர் கொள்ளைகள் நடந்து வருகின்றன. பீகாரை சேர்ந்த அஜித்குமார் குப்தா என்பவர் தன் மருத்துவத்துக்காக சென்னை வருவதற்கு முன் ராமநாதசுவாமி தரிசனம் காண தன் மனைவியுடன் ராமேஸ்வரம் சென்றிருக்கிறார். அக்னி தீர்த்த கடற்கரையில் நீராட சென்றபோது அஜித்தின் மனைவியை இருவர் ஏமாற்றி மருத்துவ செலவுக்கு வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், கோவில் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

zCdd

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்படிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இதுவரை 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கபடாமல் இருக்கிறதாம்!.. சிசிடிவி கேமராக்களின் உதவி இருந்தும் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்காததை பார்த்தால், இதற்கு காவலர்களும் உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் இடையே எழத் துவங்கியுள்ளது.