காவல்துறையினர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்தானே?! ; கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி ஆவேசம்

 

காவல்துறையினர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்தானே?! ; கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி ஆவேசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாய் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய எம்பி கனிமொழி, காவல்துறையினர் இந்த வழக்கில் மேம்போக்காக செயல்படுவதை சுட்டிக்காட்டி பேசினார்.

kani

பொள்ளாச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்ட கூட்டத்துக்கு காவல்துறையினர் தடையையும் மீறி வந்தார் கனிமொழி. காவல்துறையினர்கள் அதிகம் சூழ்ந்திருந்த போது பேச்சை துவங்கிய அவர், நம்மைவிட காவல்துறையினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்தானே, அதான் ஆத்திரத்தில் நம்மோடு சேர்ந்து போராட வந்திருக்கிறார்கள் போல என அரசாங்க நெருக்கடியை சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் காவல்துறையிடம் புகார் கொடுத்தவுடன் அவரை அடிக்க ஆள் வருகிறார்கள் என்றால், யார் அவர்களுக்கு தகவல் கொடுப்பது. டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்ணை கன்னத்தில் அறைந்து, காது கேட்காமல் போகும் அளவுக்கு செய்தவர் இப்போது கோவை மாவட்ட காவல்துறையின் எஸ்பி ஆக உள்ளார். அவரை போன்று எல்லா காவல்துறையினரும் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். 

கனிமொழி

இந்த விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் திமுக உட்பட பிற அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவித்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரையே காவல்துறை பதிவு செய்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக அரசியல் செய்ய வேண்டும் என்றால், அப்படிதான் செய்வோம் என்றார். பெண்கள் மற்றும் திருநங்கைகளின் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் எம்பி கனிமொழி. இந்த விஷயத்திலும் விரைந்து செயல்பட்டுள்ளார், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 650 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கனிமொழி மற்றும் திமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.