காலை 7 மணிக்குள் வந்தால் மட்டுமே கோயம்பேடு சந்தையில் காய் வாங்கமுடியும்! திடீர் திடீரென வெளியிடப்படும் அறிவிப்புகள்

 

காலை 7 மணிக்குள் வந்தால் மட்டுமே கோயம்பேடு சந்தையில் காய் வாங்கமுடியும்! திடீர் திடீரென வெளியிடப்படும் அறிவிப்புகள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கோயம்பேடு சந்தையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி சந்தைக்கு வெளியே சாலையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கோயம்பேடு சந்தையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி சந்தைக்கு வெளியே சாலையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி அட்டை வைத்திருக்கும் வியாபாரிகள் அவர்களின் வாகனங்களும் மட்டுமே சந்தைக்கும் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

market

இதற்கிடையில் நேற்று வியாபாரிகள் பாஸ் இருந்தால்தான் மார்க்கெட்டுக்கு வர முடியும் என்று மாநகாட்சி அறிவித்திருந்தது. அந்த தகவலே வியாபாரிகளுக்கு முழுமையாக போய்ச் சேராத நிலையில் நாளை முதல் கோயம்பேடு சந்தைக்கு இருசக்கர வாகனங்களில் வரும் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் காலை 7 மணிக்குள் வந்து சரக்குகளை வாங்கி செல்லுமாறு கோயம்பேடு வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.