காலை 6.30க்கு இடியப்பம் பாயா, இட்லி மீன்குழம்பு! வேலூரில் ஒரு வித்தியாசமான உணவகம்

காலை 6.30க்கு இடியப்பம் பாயா, இட்லி மீன்குழம்பு! வேலூரில் ஒரு வித்தியாசமான உணவகம்

பொதுவாக சேலத்தில் ஆரம்பித்தால் கொங்கு மண்டலம் முழுவதுமே காலையிலேயே கறிக்குழம்போடுதான் அன்றைய நாளைத் துவங்குவார்கள்.வட தமிழகத்தில் அந்த பழக்கம் இல்லை.வேலூரில் மட்டும் கஸ்பா பகுதியில் வந்து நிற்கும் லாரி டிரைவர்களுக்காக சில சிறிய கடைகளில் நான் வெஜ் பிரேக்ஃபாஸ்ட் கிடைக்கும்.

vellore kitchen

ஆனால்,இப்போது வேலூர் தோட்டப்பாளையத்தில் புதிதாக துவங்கப்பட்டு இருக்கும் இந்த வேலூர் கிச்சன் உணவகம் கறிப் பிரியர்களின் கனவு உணவகம்.
பனிவிலகாத காலை 6.30க்கே,பாயா,கொத்துக்கறி,கெட்டி கிரேவி,விரால்மீன் குழம்பு என ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்.அவர்கள் தருகிற வித விதமான காம்போக்களும் கலக்கல்.

idly

உதாரணமாக பூரிக்கு கிழங்கு,அல்லது குருமாவை விட்டால் கதியில்லாமல் காத்திருந்தீர்களா,வேலூர் கிச்சனில் பூரியுடன் மட்டன் கொத்துக்கறி தருகிறார்கள், காம்போ அள்ளுகிறது.அதேபோல நெய்ரோஸ்ட் என்கிற முறுகலான தோசைக்கு எத்தனையோ சட்டினிகளும்,தவறாமல் சாம்பார்களும் பரிமாற பார்த்திருப்பீர்கள்.இங்கே அதற்கு ஜோடி,நாட்டுக்கோழி மிளகு பிரட்டல்.கொஞ்சம் மிளகு தூக்கல்தான் என்றாலும்,மிச்சம் வைக்காமல் வழித்து நக்கிவிட்டுதான் வருவோம்.

idiyappam

அடுத்தது இடியாப்பம் பாயா,தேங்காய் அறைத்து ஊற்றி மழுங்கடிக்கப்பட்ட பாயா அல்ல,இது நல்ல சுரீர் சுவையுடன் இருக்கிறது. சூடான இட்லியுடன் காம்போவாக விரால்மீன் குழம்பு வருகிறது. அது ஒரு மாயச்சுழல் அதிலேயே மூழ்கி விடாதீர்கள் இரண்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய இருக்கிறது. அப்புறம் தோசைகள் உலகம்,இதில் கல்தோசைக்கு கெட்டி கிரேவி என்று திக்காக ஒரு கோழிக்குழம்பு வருகிறது. 

idiyappam

இன்னும் பன் பரோட்டா ,மதுரைக் கறிக்குழம்பு என்று ஒரு புது காம்போவும் உண்டு.அப்புறம் ஆம்லெட்களின் அணிவகுப்பு,சிக்கன் ஆம்லெட்,மட்டன் ஆம்லெட்,நண்டு ஆம்லெட் என்று வரிசையாக வந்து கொண்டே இருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவை அத்தனையும் காலை ஆறரை மணிக்கே தயாராகி விடுவதுதான்.

dosai

நேரடியாக விவசாயிகளிடம் இருந்தே வாங்குவதால் ஆடு,கோழி எல்லா இறைச்சியிம் அத்தனை மென்மையாக இருக்கின்றன.N.H 46 ல் வரும்போது தோட்டப்பாளையம் மேம்பாலத்தின் கீழே இருக்கிறது வேலூர் கிச்சன்.