‘காலையில சாமி கும்பிட போனா கோயிலை காணோம்’ : சிசிடிவி காட்சியில் வெளிவந்த உண்மை!

 

‘காலையில சாமி கும்பிட போனா கோயிலை காணோம்’ : சிசிடிவி காட்சியில்  வெளிவந்த உண்மை!

காலை கோயிலுக்கு வழக்கமாக சாமி கும்பிடவரும் சிலர் வந்து பார்த்தபோது அங்கு கோயில் இல்லை.

தாம்பரம் அருகே உள்ள மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் பல ஆண்டுகளாக விநாயகர் கோயில் ஒன்று இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் அந்த கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  அந்த கோயிலுக்கு பின்புறம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று கட்டப்பட்டது. 

ttn

இதையடுத்து அந்த கோயில் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறிய அந்த நிறுவனத்தினர் அதை இடிக்கப்போவதாகக் கூறினர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்கு வழக்கமாக சாமி கும்பிடவரும் சிலர் வந்து பார்த்தபோது அங்கு கோயில் இல்லை. இதனால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

ttn

 இதுகுறித்து சேலையூர் போலீஸ்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவோடு இரவாக சிலர் அந்த கோயிலை இடித்து தரைமட்டமாகியதும், பின் அங்கிருந்த பொருட்களை லாரியில் ஏற்றிச் சென்றதும்  தெரியவந்தது . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.