காலியாக உள்ள பாஜக தலைவர் பதவி : பிரபல நடிகருக்கு அடித்த ஜாக்பாட்!

 

காலியாக உள்ள பாஜக தலைவர் பதவி : பிரபல நடிகருக்கு  அடித்த ஜாக்பாட்!

மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனால் யார் பாஜகவின் அம்மாநில தலைவர் என்ற கேள்வி எழுந்தன. 

கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக நடிகர் சுரேஷ் கோபி தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ 
 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அரசியல் பக்கம் சென்ற இவர், பாஜகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார். தற்போது இவருக்குக் கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக வாய்ப்பு கிடைத்துள்ளது.

suresh

காரணம் கேரள மாநில பாஜக தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, மிஷோராம் மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனால் யார் பாஜகவின் அம்மாநில தலைவர் என்ற கேள்வி எழுந்தன. 

suresh

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து சுரேஷ் கோபியிடம்  பேசியுள்ளதாகவும், அவருடன் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மலையாள  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.