காற்று மாசால் சிவலிங்கத்திற்கு மாஸ்க் போட்ட பக்தர்கள்..!

 

காற்று மாசால் சிவலிங்கத்திற்கு மாஸ்க் போட்ட பக்தர்கள்..!

தீபாவளி பண்டிகை முடிந்ததிலிருந்து காற்று மாசுபாட்டால்  டெல்லி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

தீபாவளி பண்டிகை முடிந்ததிலிருந்து காற்று மாசுபாட்டால்  டெல்லி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் அறுவடை செய்த பின்னர் அந்த நிலங்களில் மீண்டும் பயிரிடுவதற்காக நிலங்களை எரிப்பதன் புகையும், தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள் புகையும் சேர்ந்து டெல்லி முழுவதிலும் கடும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியாமல் அங்கிருக்கும் மக்கள் திணறி வருகின்றனர். எங்கே சென்றாலும் அவர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லும் நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த காற்று மாசுபாடு பல மக்களை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. 

Sivalingam

டெல்லி மட்டுமன்றி உத்திர பிரதேசம் மாநிலத்திலும் காற்று மாசு பரவியுள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்களும் மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியே செல்கின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேசம், வாரணாசியில் தர்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் சிவலிங்கம் உள்ளது. அந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் அந்த சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவித்துள்ளனர். 

Devotee

இது குறித்துப் பேசிய பக்தர்கள், ‘காற்று மாசால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். இந்த விஷக் காற்றிலிருந்து சிவபெருமானைக் காப்பாற்றத் தான் சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவித்துள்ளோம். இந்த காற்று மாசுபாட்டில் அவர் பாதிக்காமல், நலமாக இருந்தால் தான் நாங்கள் நலமாக இருப்போம்’ என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.