காற்றில் அடித்து செல்லப்பட்ட படகு: பாம்பன் ரயில் பாலத்தில் மோதும் அபாயம்

 

காற்றில் அடித்து செல்லப்பட்ட படகு: பாம்பன் ரயில் பாலத்தில் மோதும் அபாயம்

பாம்பன் கடல் பகுதியில், ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றால் படகு ஒன்று பாம்பன் பாலம் அருகே பாறையில் மோதி நின்றதால் பரபரப்பு நிலவியது.

ராமேஸ்வரம் : பாம்பன் கடல் பகுதியில், ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றால் படகு ஒன்று பாம்பன் பாலம் அருகே பாறையில் மோதி நின்றதால் பரபரப்பு நிலவியது.

ராமேஸ்வரம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த சூறவாளி காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த இனியன் என்பவர்க்கு சொந்தமான படகின் நங்கூரம்கயிறு அறுந்து பாம்பன் ரயில் பாலம் 13வது தூண் பகுதியில் 10 மீட்டர் இடைவெளியில் பாறையில் மோதி நின்றது.

pamban

இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் மாற்று படகில் சென்று படகை கூடுதல் நங்கூரம் இட்டு கடலில் பாதுகாப்பாக நிறுத்தினர். இதனால் ரயில் பாலத்தில் மோத வேண்டிய படகு மீட்கப்பட்டது. இருப்பினும் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகை அப்பகுதியில் இருந்து மீட்க முடியவில்லை.
படகு, ரயில் பாலத்தில் மோதி சேதமடைய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.