கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் திருட்டு! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடுமை!

கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் திருட்டு! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடுமை!

தமிழகத்தில் பெருகி வரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் அதிகளவில் பொதுமக்களின் நடமாட்டம் உள்ள பகுதியான பத்திரபதிவு அலுவலகத்தின் வாசலில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தைத் திருடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில், வேப்பனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜூ என்பவரின் நிலத்தை விலைக்கு வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார். நிலத்தைப் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக நேற்று, வேப்பனப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தன்னுடைய மாருதி காரில் சஞ்சீவி  வந்தார்.

car

பத்திரப்பதிவையொட்டி, ராஜூவிற்கு கொடுப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பணத்தையும் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய காரில், பையில் வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும் வைத்து விட்டு, கார் கண்ணாடிகளை எல்லாம் ஏற்றிவிட்டு, காரைப் பூட்டி விட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே சென்றார் சஞ்சீவி. பத்திரப்பதிவை முடித்துக் கொண்டு சஞ்சீவியும், ராஜூவும் அலுவலகத்தின் வெளியே வந்து காரில் உள்ள பணத்தை எடுக்க சென்றார்கள். அப்போது, காரின் கண்ணாடி முழுவதும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு, காருக்குள் இருந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனஹள்ளி போலீசார், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில், அதிக ஜனநடமாட்டம் உள்ள பகுதியில் கார் கண்ணாடியை தைரியமாக உடைத்து, பணத்தைத் திருடிச் சென்றது அந்த பகுதியினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.