கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடி திருப்பித் தராத நீதிமன்றம்!

கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடி திருப்பித் தராத நீதிமன்றம்!

வெளிநாடு செல்ல ரூ.20 கோடி டெபாசிட் செய்த விவகாரத்தில் பணத்தைத் திருப்பித்தர உத்தரவிடக் கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு செல்ல ரூ.20 கோடி டெபாசிட் செய்த விவகாரத்தில் பணத்தைத் திருப்பித்தர உத்தரவிடக் கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

karti

ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது நீதிமன்றத்தில் ரூ.10 கோடி வைப்புத்தொகை செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.10 கோடியும் அதே போல் மே மாதம் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.20 கோடி செலுத்தியிருந்தேன்.

chidambaram

வெளிநாடு சென்று வந்த பிறகு அந்த பணத்தைத் திரும்ப அளிக்கவில்லை. எனவே, நான் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை திருப்பி அளிக்கும்படி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைப்புத் தொகையாக செலுத்திய பணத்தை நீதிமன்றம் திருப்பி அளிக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.