கார்த்திகை மாத மிதுன ராசி பலன்கள் 

 

கார்த்திகை மாத மிதுன ராசி பலன்கள் 

மிதுன  ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மிதுன ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் 5 ல் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர். மேலும் 6 ல் குரு,2ல் ராகுவும்,8ல் கேதுவும் 7ல் சனிபகவானும் 9ல் செவ்வாய் பகவானும் வீற்று இருக்கின்றனர். 

mithunam

குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலவும். எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். கார்த்திகை மாதத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிக ராசியில் தான் இருக்கிறார்.

இது சாதகமான இடம். அவரால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சனி, ராகுவால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் அதை சூரியன்,சுக்கிரன் முறியடிப்பார்கள். செயலில் அனுகூலம் உண்டாகும். 

பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று இருக்கிறீர்கள். ஆற்றல் மேம்படும். முக்கிய பொறுப்புகளை குடும்ப பெரியவர்களின் வசம் ஒப்படையுங்கள்.

mithunamjk

சூரியன், சுக்கிரன் மாதம் முழுவதும், மாதப் பிற்பகுதியில் புதனும் நற்பலன்களைத் தருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். 

திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு,அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

mithunam

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். 

மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். 

mithunam

சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

மிதுன லக்ன பலன்கள் : பாக்கியங்கள் பல்வேறு வழிகளில் உங்களுக்கு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீரும்.

மிருகசீரிடம்  நட்சத்திரம் : வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல வாய்புகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரம் : சுப நிகழ்சிகளில் பங்குபெறும் சூல்நிலை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரம் : உறவினர்களிடயே ஏற்பட்டு வந்த பகை நீங்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர்: 11, 12

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,5,9

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன்,வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப்பெருமான்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமை களில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம் செய்வதும் அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை சாத்துவதும் மிதுன ராசியினருக்கு மிக சிறந்த பாரிகாரம் ஆகும்.