கார்த்திகை மாத கன்னி ராசி பலன்கள்

 

கார்த்திகை மாத கன்னி ராசி பலன்கள்

கன்னி ராசிக்கு ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கன்னி ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் 2 ல் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் வீற்று இருக்கின்றனர். மேலும் 3 ல் குரு, 11 ல்ராகுவும், 5ல் கேதுவும் 4ல் சனிபகவானும் 6ல் செவ்வாய் பகவானும் வீற்று இருக்கின்றனர்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். சூரியன் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கிறார். சூரியனால் பொருளாதார வளம் கூடும். உடல்நலம் சிறப்படையும். உங்கள் ஆட்சி கிரகமான புதன் வக்கிரம் அடைந்து 2ம் இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அவர் டிச.8ல் வக்கிர நிவர்த்தி அடைவதால் விருச்சிகத்திற்கு மாறுகிறார். உங்கள் நட்பு கிரகமான செவ்வாய் 6-ம் இடத்தில் இருக்கிறது. இதனால் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.

 

குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளைத் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். 

சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். 

kanni

பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக செயல்படுவர். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை, அணிகலன்கள் பெற்று குதுாகலம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். நவ.18,19,20 சிறப்பான நாட்களாக அமையும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். 

kanni

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். மாணவ மாணவியர்க்கு, புதன் சாதகமாக இல்லாத காரணத்தால் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

 

கன்னி லக்ன பலன்கள்: தேக்க நிலை மாறி அனுகூலமான பலன்கள் ஏற்படும். முயற்சிகள் வெற்றி அடையும்.

உத்திரம் நட்சத்திரம் : புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரம் : உடல் நலத்தில் கவனம் தேவை.

சித்திரை நட்சத்திரம் : வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர்: 21, 22

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,5

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் மற்றும் வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர்

kanni

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாற்றுவதும் வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதும் மேன்மையான பரிகாரமாக கருதப்படும். வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.