கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்; மகா தீபம் ஏற்றப்பட்டது

 

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்; மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.   

அன்றுமுதல் பல்வேறு வாகங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவின் ஆறாம் நாளன 19ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 20ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெற்றன. 

அதனையடுத்து, இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து, உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை சரியாக 6 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. 

அந்த காட்சியை காண கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, மகா தீப தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்தனர். 

திருவண்ணாமலை தீபம் எப்படி உருவானது என்று தெரிந்துகொள்ள?