கார்கில் சமயத்தில் இந்தியாவை உதாசீனப்படுத்திய நாடுகள்… சாட்டிலைட் படம் ஒன்றுக்கு ரூ.36 ஆயிரம் கேட்ட கொடுமை!

 

கார்கில் சமயத்தில் இந்தியாவை உதாசீனப்படுத்திய நாடுகள்… சாட்டிலைட் படம் ஒன்றுக்கு ரூ.36 ஆயிரம் கேட்ட கொடுமை!

கார்கில் போர் நடைபெற்ற போது, இந்திய ராணுவத்துக்கு உதவ யாரும் முன்வராததோடு நம்மை பல நாடுகள் உதாசினப்படுத்தின என்று ராணுவ முன்னாள் தளபதி மாலிக் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் வலிமையான ராணுவங்களுள் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால், எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்தே வாங்கும் அளவுக்குத்தான் நம்முடைய தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளது.

கார்கில் போர் நடைபெற்ற போது, இந்திய ராணுவத்துக்கு உதவ யாரும் முன்வராததோடு நம்மை பல நாடுகள் உதாசினப்படுத்தின என்று ராணுவ முன்னாள் தளபதி மாலிக் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

malik

உலகின் வலிமையான ராணுவங்களுள் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால், எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்தே வாங்கும் அளவுக்குத்தான் நம்முடைய தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளது. போர் வரும் நேரத்தில்தான் இந்திய ராணுவத்தின் உண்மை பலம் தெரியவரும் என்பதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மாலிக்கின் பேச்சு.
மேக் இன் இந்தியா நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “கார்கில் போர் நேரத்தில் நம்மிடம் ராணுவத் தளவாடங்கள் பற்றாக்குறை இருந்தது. உதவும்படி பல நாடுகளைக் கேட்டுக்கொண்டோம். எந்த அளவுக்கு உதாசீனப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அந்த நாடுகள் நம்மை உதாசீனப்படுத்தின. 
நவீன துப்பாக்கி வேண்டும் என்று கேட்டோம். தருவதாக உறுதியளித்த ஒரு நாடு, மிகப் பழைய துப்பாக்கியை நமக்கு கொடுத்தது. வேறு ஒரு நாடு நமக்கு அளித்த துப்பாக்கியை பயன்படுத்தவே முடியவில்லை. 
எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சேட்டிலைட் படங்கள் உதவியாக இருக்கும். வெளிநாடுகளிடம் கேட்டபோது, எவ்வளவு அதிகமாக பணத்தை வாங்க முடியும் என்பதிலேயே குறியாக இருந்தன. ஒரு படத்தை ரூ.36 ஆயிரம் கொடுத்து வாங்கிய நிலை இருந்தது. போர் என்றுவந்துவிட்டால் நட்பு நாடு என்று யாரும் நமக்கு உதவவில்லை. உதாசீனப்படுத்திப் புறக்கணித்ததுடன் ஏமாற்றவும் செய்தன” என்றார்.

kargil war

விண்வெளியில் இந்தியா சாதனைகளை படைத்து வருகிறது. இன்றைக்கு நம்முடைய செயற்கைக்கோள்களைக் கொண்டு உலகையே கண்காணிக்க முடியும் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டோம். ஆனால். இன்றும் ராணுவ தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கியே உள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளையே இந்தியா நம்பியுள்ளது. இந்த நிலை மாறினால் மட்டுமே இந்தியா வல்லரசாக முடியும்.