காரைக்காலில் தன்மையாக செயல்படும் போலீசார் – பச்சை மண்டலமாக நீடிக்கும் ரகசியம்

 

காரைக்காலில் தன்மையாக செயல்படும் போலீசார் – பச்சை மண்டலமாக நீடிக்கும் ரகசியம்

காரைக்கால் கொரோனா தாக்காத பசுமை மண்டலமாக நீடித்து வருகிறது. அதற்கான ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது

காரைக்கால் நாட்டின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட தலைநகர் ஆகும். காரைக்கால் மொத்தம் 5 தொகுதிகளை அடங்கிய பகுதி என்றாலும் இங்கு மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். ஆனாலும் மற்ற மாவட்டங்களை போல் அல்லாமல் காரைக்கால் கொரோனா தாக்காத பசுமை மண்டலமாக நீடித்து வருகிறது. அதற்கான ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது.

காரைக்காலில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் உள்ளனர். ஆனாலும் போலீசாரின் அறிவுரைகளையும், கட்டுப்பாடுகளையும் அங்குள்ள மக்கள் பொறுப்பாக கடைபிடிக்கின்றனர். அவ்வாறு போலீசாருக்கு ஆதரவாக மக்கள் நடந்து கொள்வதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்ட போலீசார் போல மக்களுடன் காட்டமாக நடந்து கொள்வது, விரட்டி பிடிப்பது, தண்டிப்பது போன்ற செயல்களில் காரைக்கால் போலீசார் ஈடுபடுவதில்லை.

அதற்கு மாறாக முக கவசம் அணியாமல் வரும் பாதசாரிகளிடம் அதை அணிவதன் அவசியத்தை கனிவாக எடுத்து கூறுகின்றனர். 24 மணி நேரமும் பறக்கும் கேமராக்கள் மூலம் போக்குவரத்து, வாகன நெரிசல், பொது இடங்களில் மக்கள் கூட்டம் ஆகியவை கட்டுப்பட்டு அறையிலிருந்தே கண்காணிக்கப்படுகிறது. காரைக்கால் போலீசார் தன்மையாக நடந்து கொள்வதால் அப்பகுதி பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

முதியவர்கள் சாலையில் தென்பட்டால் போலீசாரே முககவசம் அணிவித்து அனுப்புகின்றனர். சோர்வாக நடந்து வரும் முதியோருக்கு குளிர்பானம் தந்து அவர்களை ஆசுவாசப்படுத்தி அனுப்புகின்றனர். அதனால் காரைக்கால் போலீசாரின் அணுகுமுறை காரணமாக காரைக்கால் பசுமை மண்டலமாக மாறியுள்ளது.