காரில் சைரனுடன் வலம் வந்த இளைஞர்! – மடக்கிப்பிடித்த போலீசுக்கு அதிர்ச்சி

 

காரில் சைரனுடன் வலம் வந்த இளைஞர்! – மடக்கிப்பிடித்த போலீசுக்கு அதிர்ச்சி

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையிலும் இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் சாலையில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

டெல்லியில் காரில் சைரன் வைத்தபடி வலம் வந்த இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையிலும் இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் சாலையில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இப்படி வெட்டியாக சாலைகளில் திரியும் ரோமியோக்களுக்கு போலீசார் விதவிதமான தண்டனைகள் கொடுத்து வருகின்றனர். போலீசின் தண்டனையிலிருந்து தப்பிக்க டெல்லியில் இளைஞர் ஒருவர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrested.jpg

டெல்லியில் உள்ள கேசவ்புரம் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சைரன் வைத்த, இந்திய அரசு என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். சாதாரண காரில் எல்லாம் சைரன் வைக்க மாட்டார்களே என்று சந்தேகம் அடைந்த போலீசார், காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தன்னுடைய பெயர் ஆதித்யா குப்தா (29) என்றும் தான் ஒரு ஐ.ஏ.எஸ் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணி புரிவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவரைப் பார்க்க ஐ.ஏ.எஸ் அதிகாரி போலவும் தெரியவில்லை. இருந்தாலும் பயம் மற்றும் மரியாதையுடன் ஐ.டி கார்டை காட்டும்படி கேட்டுள்ளனர். தன்னிடம் ஐ.டி கார்டு எல்லாம் இல்லை என்று அவர் தயங்கி தயங்கி பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை என்பது உறுதியானது.
ஊரடங்கு நேரத்தில் சாலையில் சகஜமாக சென்று வர முடியவில்லை என்பதால் சைரன் வைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று ஏமாற்றி வந்ததாகவும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆதித்யா குப்தாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.